பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளரான ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேலுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உகாண்டாவுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை, இஸ்ரேல் சென்ற ப்ரீத்தி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்தார்.
பிரிட்டன் உதவி பணத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு வழங்க ப்ரீத்தி முடிவு செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ப்ரீத்தி பட்டேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை பிரதமர் தெரேசா மேவிடம் வழங்கியதுடன், இஸ்ரேலில் அமைச்சர்களை சந்தித்தது தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.