ஓடு தளத்தில் மோதவிட்டு தரையிறங்கிய விமானம்: உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அயர்லாந்தின் ஜார்ஜ் பெஸ்ட் விமான தாவளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென ஓடு தளத்தில் மோதவிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அயர்லாந்தின் ஜார்ஜ் பெஸ்ட் விமான தாவளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணி அளவில் குறித்த பயணிகள் விமானமானது புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் விமானத்தின் முன்பக்க கியர் வேலை செய்யவில்லை என்றும் இதனால் விமானத்தை உடனே ஜார்ஜ் பெஸ்ட் விமான தாவளத்தில் தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என விமானி கோரியிருந்தார்.

இதனையடுத்து 1.43 மணி அளவில் குறித்த விமானமானது ஓடுதளத்தில் மோதி அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் பயணி ஒருவருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

விமானம் அவசரமாக திருப்பி விடப்பட்டதும் பயணிகள் பதற்றத்தில் விசாரணையில் இறங்கினர். இதனையடுத்து கியர் பிரச்னை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டதாகவும், ஆனால் பதற்றமடைய தேவையில்லை எனவும் விமானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிபொருளின் அளவை குறைக்கும் பொருட்டு குறித்த விமானம் வானில் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த 52 பயணிகளும் அச்சத்தில் உறைந்து போயிருந்ததாகவும், சிலர் உயிர் பயத்தில் அலறியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் விமானியின் சம்யோசிதத்தால் 52 பயணிகளும் காயமின்றி தப்பியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்