உயிரிழக்கப் போகும் மகள்.. நடனமாடிய தந்தை! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா
1010Shares
1010Shares
lankasrimarket.com

தன்னுடைய குழந்தை எப்போது வேண்டுமானாலும் உயிரிழந்து விடலாம் என்ற நிலையில், அதை கையில் வைத்து கொண்டு தந்தை நடனமாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் கெவின் (51), இவர் மனைவி மர்சியா. இவர்களுக்கு டாம் (19) அன்னி (10), மில்லி மெக்யூரி (2) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பெண் குழந்தையான மில்லிக்கு பிறக்கும் போதே மூளையில் வளர்சிதை மற்றும் கோளாறு இருந்துள்ளது.

இதன் காரணமாக பிறந்த அன்றே கூட மில்லி உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூற பல்வேறு சிகிச்சையால் குழந்தை 2 வயது வரை உயிரோடு இருந்து வருகிறது.

தற்போது மில்லிக்கு நோய் மிகவும் முற்றியுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் உயிரிழந்து விடும் என மருத்துவர்கள் கெவின் மற்றும் மர்சியாவிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தங்களது குழந்தையுடன் முடிந்தவரை பெற்றோர் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தனியார் இசை குழுவினர் இசைக்க மில்லியை கையில் வைத்து கொண்டு கெவின் நடனமாடினார்.

நடனமாடும் போது அவர் கண்களில் நீர் வழிந்தது, இசை குழுவினரும் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து கெவின் கூறுகையில், என் மகள் வளர்ந்த பிறகு அவளுடைய பிறந்த நாள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் அவளுடன் சேர்ந்து நடனமாட முடியாது என எனக்கு தெரியும், அதனால் தான் தற்போது ஆடுகிறேன்.

அவள் எங்களுடன் இருக்கும் நாட்கள் வரை மகிழ்ச்சியாக வைத்திருப்போம் என கூறியுள்ளார்.

மில்லி உடல்நிலை மோசமாக உள்ளதால் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்