பிரித்தானியாவில் உடல்பருமனான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Fathima Fathima in பிரித்தானியா
99Shares
99Shares
lankasrimarket.com

வடக்கு ஐரோப்பாவில் பிரித்தானியாவிலேயே உடல் பருமனான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தற்போதைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Organisation for Economic Co-operation and Development வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு சகாப்தங்களை ஒப்பிடுகையில் பிரித்தானியாவில் உடல் பருமனான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

63 சதவிகிதம் பேர் எடை அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். வடக்கு ஐரோப்பாவிலேயே பிரித்தானியா தான் மிக மோசமான நிலையில் உள்ளது.

1990ம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் உடல்பருமன் 92 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் 65 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

எனினும் புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குறைவாக இருப்பதால் ஆயுட்காலம், சுகாதாரம் போன்றவை சராசரியாக உள்ளது.

குறிப்பாக குழந்தைகளின் உடல்பருமனை தடுப்பதில் பிரித்தானியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்