பிரித்தானிய பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எம்.பிக்களின் ஆதரவு அதிகரிப்பு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
290Shares
290Shares
lankasrimarket.com

பிரித்தானிய பிரதமரான தெரசா மே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகியது முதல் அந்நாட்டு அரசியல் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேற்று வருகிறது.

புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றதை தொடர்ந்து பிரெக்ஸிட் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.

ஆனால், சமீக நாட்களாக ஆளும்கட்சிக்கு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிகளவில் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல், சொந்தக்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்களும் தெரசா மேக்கு எதிராக களம் இறங்கி வருகின்றனர்.

தெரசா மே மீது அதிருப்தி அதிகரித்து வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதற்கு 35 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனா;, இன்று வெளியான தகவலில் தெரசா மேக்கு எதிராக கையெழுத்திட கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 40 எம்.பிக்கள் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கொன்சர்வேட்டி கட்சியின் சட்டவிதிகள்படி, 48 எம்.பிக்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கையெழுத்திட்டால் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்படுவதுடன் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்