என் பிள்ளைகளுக்கு இதை செய்யுங்கள்: உயிரிழக்க போகும் தாயின் கடைசி ஆசை

Report Print Raju Raju in பிரித்தானியா
487Shares
487Shares
ibctamil.com

விசித்தர நரம்பியல் நோய் பாதிப்பால் விரைவில் உயிரிழக்க போகும் தாய் ஒருவர் தனது மகன்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நன்கொடை வசூலித்து வருகிறார்.

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷிர் கவுண்டியை சேர்ந்தவர் சாம் கைம் (34) இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் motor neurone என்ற வினோத நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நோய் காரணமாக சாம் சில மாதங்களில் உயிரிழந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது நோய் முற்றியுள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை தான் சாம் தனது மகன்கள் ஜோயி (12) மற்றும் ஹரி (8)-யுடன் கொண்டாட போகும் கடைசி பண்டிகையாக இருக்க போகிறது.

தான் இறந்த பிறகு மகன்கள் கஷ்டப்படக்கூடாது என நினைக்கும் சாம் உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

அதன்படி ஜோயி மற்றும் ஹரி ஆகிய இருவரும் தனது இறப்புக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் இருக்கும் சகோதரி பீப்பாவுடன் சென்று தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டும் என சாம் நினைக்கிறார்.

மேலும், பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக நண்பர்கள் உதவியுடன் நிதி திரட்டும் பக்கத்தை அமைத்துள்ளனர்,

£15,000 பணத்தை வசூலிப்பதே சாமின் குறிக்கோளாக இருக்கும் நிலையில், தற்போது £10,000 வரை நிதி வசூலாகியுள்ளது.

இது குறித்து சாம் கூறுகையில், நான் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம், அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

இறப்புக்கு பின்னர் என் மகன்கள் காப்பகத்துக்கு செல்லக்கூடாது, என் சகோதரியுடன் சென்று புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்