உதவி கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியர்: பிரித்தானியா நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடைக்கு வந்த பெண்ணை கற்பழித்த இந்தியா வம்சாவளி நபருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவாப்னில் குலாத்(30), பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வருவதுடன் அங்குள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 19-ஆம் திகதி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சார்ச் தீர்ந்துவிட்டதால் போனை சார்ஜ் போடுவதற்காக குலாத் கடைக்கு சென்றுள்ளார்.

அச்சமயம் பார்த்து, கடையின் கதவை மூடி அப்பெண்ணை கற்பழித்தார், அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

ஆனால் அப்பெண் தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று குலாத் மீது புகார் அளித்தார், வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதால், 7 ஆண்டுகள் 8 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்த பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்