இலங்கைக்கு எப்போதும் செல்ல மாட்டேன்: பிரித்தானிய பெண் சபதம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

இலங்கைக்கு இனி எப்போதும் செல்ல மாட்டேன் என பிரித்தானிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

கையில் பச்சை குத்திய காரணத்தினால் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்ணே இவ்வாறு நேற்று தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணை நாடு கடத்தியமை மனித உரிமை மீறல் என ஏற்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்த மகிழ்ச்சி அடைந்த போதிலும் இனிமேல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எண்ணம் இல்லை என பிரித்தானிய நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த நயோமி கொல்மன் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையாகவே நான் மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட காலம் நான் தீர்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்தேன். சட்டத்தரணிகள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அதில் பதில் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

நேற்று இந்த தகவல் கிடைத்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையாகவே நான் மகிழ்ச்சியடைந்தேன்.

நான் ஒரு போது பௌத்த மதத்தை அவமதிப்பதற்கோ அல்லது இலங்கை கலாச்சாரத்தை அவமதிக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. நான் இன்னமும் பரிசுத்தமான பௌத்தர்.

எனினும் நான் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு எண்ணவில்லை. இலங்கை குறித்து தவறான எண்ணம் இல்லை. இவை அனைத்தும் ஒரு நபரிடம் இருந்தே ஆரம்பமாகியது.

மேலும் என்னை குறித்து பேஸ்புக் பக்கங்களில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டிருந்தது. எனது சட்டத்தரணி போன்று எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என நயோமி குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆணடு தாமரையில் அமர்ந்திருக்கும் புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வந்திறங்கிய குறித்த பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்