பேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணிநேரத்திற்குள் நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சாலையில் வசித்த வந்த நபர் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து அவருக்கும் வசிப்பதற்கு வீடும், வேலையும் கிடைத்துள்ளது.

மைக்கேல் பீக்ஸூன் என்ற நபர் 8 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியேவந்துள்ளார். இவருக்கு வேலை மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காத காரணத்தால் Melton Mowbray நகரின் சாலையில் வசித்துள்ளார்.

இவரை பார்த்த ஷான் என்பவர், இவரிடம் பேச்சு கொடுத்து இவர் குறித்த தகவல்களை சேகரித்துள்ளார்.

அதன்பின்னர், அந்த நபருக்கு உதவுவதற்கு முயற்சி செய்ய முடிவெடுத்தார்.

அந்த நபருக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஷார்க்கி பேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணிநேரத்திற்குள், ஒருவரின் வீட்டில் பீக்ஸ் தங்குவதங்கு ஓர் அறை வழங்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடத்தில் அவருக்கு வேலையும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, மைக்கேல் கூறியதாவது, பேஸ்புக் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது, மக்கள் என்னிடம் வந்து, நாங்கள் எவ்வாறு உங்களுக்கு உதவலாம் என்று கேட்கின்றனர். இதுபோல நடக்கும் என்று தான் எண்ணி பார்த்ததே கிடையாது என்று ஆச்சரியமாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்