மகாராணி எலிசபெத்- பிலிப் 70வது திருமண விழா! புகைப்படங்கள் வெளியானது

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
166Shares
166Shares
lankasrimarket.com

எலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டு திருமண விழா புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மணை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடற்படை அதிகாரியான பிலிப்புக்கும், மகாராணி எலிசபெத்துக்கும் கடந்த 1947ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி திருமணம் நடைபெற்றது.

உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் கடந்த 70 ஆண்டுகளாக சிறந்த தம்பதிகளாய் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது 96 வயதான பிலிப்பும், 91 வயதான எலிசபெத்தும் 70வது திருமணநாளை கடந்த 20ம் திகதி கொண்டாடினர்.

மேற்கு லண்டனில் உள்ள அரச குடும்பத்தின் விண்ட்சோர் கேஸ்ட்ல் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் எளிமையாக இந்த விழா கொண்டாடப்பட்டதாக அரண்மணையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

தனது 70வது திருமண விழா அன்று 10,000 முத்துகளால் ஆன பிரத்யேக ஆடை அணிந்து வந்து அனைவரயும் கவர்ந்த எலிசபெத் மகாராணியை புகைப்படக்காரர் மேட் ஹோலியாக் படம்பிடித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அரண்மனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்