பட்ஜெட் 2017: டீசல் வாகனங்களுக்கு அதிக வரி, சொத்துகளுக்கான முத்திரை வரி நீக்கம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
294Shares
294Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் முதன் முறையாக சொத்து வாங்குவோருக்கான முத்திரை வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மிக முக்கிய அம்சமக கருதப்படுவது முதன்முறை சொத்து வாங்குவோருக்கான முத்திரை வரியாகும்.

லண்டனில் £300,000-கும் கீழ் முதன் முறையாக சொத்து வாங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் முத்திரை வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளனர்.

காற்று மாசுபாடை கட்டுப்படுத்தும் வகையில் 2018 ஏப்ரில் முதல் சுங்க கலால் வரி உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் £220 மில்லியன் நிதி சேரும் என கணக்கிடப்படுகிறது.

மேலும் மது, சிகரெட் உள்ளிட்டவைகளுக்கும் விலை அதிகரிக்கும். கணிதப்பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்