பிரித்தானியர்கள் மிக அதிகம் விரும்பும் சுற்றுலா தலம் எது தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளில் ஒன்றான துருக்கியை பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மிக அதிகமாக விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் அதிகம் நடந்திருந்தாலும் பிரித்தானியர்களின் சுறுறுலா பட்டியலில் 3-வது இடத்தில் துருக்கி உள்ளது.

மேலும் கடந்த ஆண்டைவிட துருக்கியில் பிரித்தானியர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மிக குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், போதுமான சலுகைகள் என துருக்கி பிரித்தானிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக மாறியுள்ளது.

துருக்கியில் யூரோவுக்கு பதில் லிரா புழக்கத்தில் இருப்பதால் பிரித்தானியர்கள் பவுண்டின் மீது அதிக தொகை பெற்றுக் கொள்கின்றனர்.

துருக்கி மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக இருந்தாலும், அங்குள்ள Sirnak, Mardin, Sanliurfa, Gaziantep, Diyarbakir, Kilis and Hatay உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இஸ்தான்புல் இரவு விடுதில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்