இப்படியொரு செல்லபிராணியை கேள்விப்பட்டதுண்டா? வியப்பில் ஆழ்த்தும் பெண்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
638Shares
638Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் நடாலி என்னும் பெண் நரியை செல்ல பிராணியாக வளர்த்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் நடாலி ரெனால்ட்ஸ் என்பவரிடம், பிறந்த இரண்டாவது நாளே தாயை இழந்த நரி தஞ்சம் அடைந்துள்ளது.

வீட்டில் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பது போல் இந்த நரிக்கு இரவும் பகலும் பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் நடாலி.

இந்த நரியை இரவில் மட்டும் தனி அறையில் வைத்து பூட்டி விடுகிறார். தனக்கு மட்டுமல்ல எனது 5 வயது மகளுக்கும் 3 வயது மகனுக்கும் மிகச் சிறந்த நண்பன் இந்த நரி தான் என கூறுகின்றார்.

தற்பொழுது எட்டு மாதங்களை கடந்து ஓரளவு வளர்ந்துள்ள நிலையில் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு காட்டில் விட்டுவிடும் எண்ணம் இருக்கிறது என கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கால்நடை மருத்துவர் லிடியா பாரி, வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தவறு.

எந்த நேரமும் அவற்றால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு வருந்துவதை விட காட்டில் வளரும் விலங்குகளை காட்டில் விட்டுவிடுவதே நமக்கும் நல்லது அந்த விலங்குக்கும் நல்லது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்