இளவரசர் ஹரியின் காதலி திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமா? புகைப்படத்தால் சந்தேகம்

Report Print Santhan in பிரித்தானியா

இளவரசர் ஹரியின் காதலி திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவும் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வருகின்றனர்.

இதையடுத்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இந்த மாத துவக்கத்தில் லண்டனில் நடைபெற்றதாக கூறப்பட்டது.

அதன் பின் தற்போது இந்த ஜோடியின் திருமணம் Windsor Castle-ல் உள்ள St George’s Chapel தேவாலயத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கான வேலைகள் தற்போதில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இளவரசர் ஹரியின் காதலி மேகன் மார்க்லே திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமாகி இருக்கலாம் என்று டுவிட்டரில் பலர் கூறி வருகின்றனர்.

ஏனெனில் திருமண நிச்சயதார்த்ததின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஹரியும்-மேக்னா மேர்கலும் ஒன்றாக இருந்தனர். அப்போது மேக்னா மேர்கல் அணிந்திருந்த உடை தான் இவர்களுக்கு இப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேக்ன மார்க்லோ நிச்சயதார்த்ததின் போது வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கோட் அணிந்து சாதரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அவரது அந்த பெரிய கோர்ட்டில் முடிச்சுகள் போட்டப்பட்டு மறைக்கப்பட்டது போல் உள்ளதாக இணையவாசிகள் கருதுகின்றனர்.

மேலும் ஒரு இளவரசரின் நிச்சயதார்த்ததில் இவ்வளவு ஒரு எளிமை என்ற சந்தேகமும் எழுவதாகவும், இதனால் மார்க்லே திருமணத்திற்கு முன் கர்ப்பமாகியிருக்கலாம் என்று கருதுவதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் செரினா வில்லியம்ஸ் கர்பமாகி , குழந்தை பெற்றெடுத்தவுடன் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...