கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியர்: விருது வழங்கிய பிரித்தானியா

Report Print Kabilan in பிரித்தானியா
186Shares
186Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா, தனது மனைவியுடன் இணைந்து பிரித்தானியாவில் டாக்சி ஓட்டி வருகிறார்.

இவர் தனது டாக்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் திகதி 13 வயது பள்ளிச் சிறுமியை அவரது வீட்டிலிருந்து களவுசெஸ்டர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

ஆனால், அந்த ரயில் நிலையம் ஆள்நடமாட்டம் இன்றி இருந்ததால் அரோராவிற்கு சந்தேகம் எழவே, சிறுமியிடம் விசாரித்துள்ளார். அந்த சிறுமி முரணான பதில் கூற, சிறுமி போனில் பேசியதை பதிவு செய்தார்.

பின்னர், பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அரோரா. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நடத்திய விசாரணையில், சாம் ஹெவிங்ஸ் என்பவர், சிறுமியை கடத்துவதற்கு திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, பொலிசார் சிறுமியை மீட்டு அவரின் பெற்றோரிட்டம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், அரோராவின் செயலை பாராட்டி, அவருக்கு அப்பகுதி கவுன்சிலர் மூலமாக ’சிறந்த பாதுகாவலர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்