கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இளவரசர் ஜோர்ஜ் எழுதிய கடிதம்: என்ன கேட்டுள்ளார் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
315Shares
315Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜ் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு தமது கைப்பட எழுதிய கடிதத்தை அவரது தந்தையும் இளவரசருமான வில்லியம் நேரிடையாக வழங்கியுள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள இளவரசர் வில்லியம், தமது பயணத்தை முடித்துக் கொள்ளும் தருவாயில் கிறிஸ்துமஸ் தாத்தாவை சந்தித்து தமது மகன் இளவரசர் ஜோர்ஜ் கைப்பட எழுதிய கடிதத்தை அளித்துள்ளார்.

அதில், அன்புள்ள கிறிஸ்துமஸ் தாத்தா இந்த ஆண்டு நான் குறும்புக்காரனாகவும் சுட்டியகவும் உள்ளேன் என குறிப்பிட்ட குட்டி இளவரசர் ஜோர்ஜ், தமக்கு இந்த கிறிஸ்துமஸ் நாளில் பொலிஸ் கார் ஒன்று வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இளவரசர் ஜோர்ஜின் கோரிக்கையை கண்டிப்பாக பரிசீலிப்பதாகவும் பின்லாந்தின் கிறிஸ்துமஸ் தாத்தா உறுதியளித்துள்ளார்.

அன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்