கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவி: ஏழு ஆண்டுகளாக அரசை ஏமாற்றியது அம்பலம்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

இங்கிலாந்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி அரசிடம் போலியாக நிதியுதவி பெற்று வந்த பெண் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் Derbyshire-ல் வசித்து வரும் பெண் Georgina Vinall(42), ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தனது கணவர் இறந்துவிட்டதாக கூறி அரசிடமிருந்து போலியாக நிதியுதவி பெற்றுவந்தது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணையில் 2010 முதல் 2017 வரை மொத்தம் 46,449.64 பவுண்ட்ஸை வரை நிதியாக பெற்றுள்ளார்.

ஆனால் வினலின் கணவர் Hubby Mark நலமுடன் உள்ளார், இருவரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்துவருவது விசாரணையில் உறுதியாகியுள்ளதால் வினலுக்கு 26 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வினல் கூறுகையில், 2010-ஆம் ஆண்டில் நான் கையெழுத்திட்டது உண்மை தான். ஆனால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்த அரசாங்க ஊழியர்கள் மீது தான் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் Lynn Bickley, 2010-ஆம் ஆண்டில் Brailsford பகுதியில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்துவந்த போது, வினல் கையெழுத்திட்ட விண்ணப்பத்தில் தன் கணவர் மறைந்துவிட்டார் என்றும், அதனால் அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார், அதன்படியே அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வினல் தரப்பு வழக்கறிஞர் டேவிட், இது மோசடி தான், ஏழு குழந்தைகளுக்கு தாயான வினல் வசதியான வாழ்க்கை வாழவில்லை, அவரின் குடும்ப கஷ்டம் அறிந்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers