பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் அகதிக் கோரிக்கை நிராகரிப்பு!

Report Print Fathima Fathima in பிரித்தானியா
236Shares
236Shares
ibctamil.com

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள்(Gay), லெஸ்பியன்கள்(Lesbian) மற்றும் இருபால் உறவுக்கொள்ளும் நபர்களின்(BiSexual) கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியா உள்துறை அலுவலகம் முதன்முறையாக ஓரினச்சேர்க்கையாளர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் தொடர்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

கடந்த யூலை 2015முதல் மார்ச் 2017 வரை மொத்தம் 3535 கோரிக்கைகள் வந்ததாகவும், மூன்றில் ஒரு பங்கினர் கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2379 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 838 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரானிலிருந்து 84 பேர் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், பாதி பேரின் கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று 268 நைஜீரியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், 63 பேரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் உகாண்டா(108), இந்தியா(82) மற்றும் இலங்கை(48) பேரில் ஒருவர் கோரிக்கை கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பெரும்பாலும் ஈராக், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, கென்யா மற்றும் ஜமைக்கா நாடுகளை சேர்ந்தவர்களே விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்