லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொலை: அதிர்ச்சியில் அண்டை வீட்டார்

Report Print Santhan in பிரித்தானியா
907Shares
907Shares
lankasrimarket.com

லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Deptford பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருபவர் Noel Brown(69). இவருக்கு Marie (41) என்ற மகள் உள்ளார். Marie அங்கிருக்கும் Southwark பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை இவர்கள் இருவரும் Deptford-இல் இருக்கும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களாகவே Noel Brown சூதாட்டம் தொடர்பான கிளப்பிற்கு சென்று வந்தாகவும், அங்கு அவருக்கு புதிய நண்பர்களின் பழக்கம் கிடைத்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் புதிததாக அறிமுகமான நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடயவியல் நிபுணர்களும் அவரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை அறிந்த அண்டை வீட்டார் மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்