பிரித்தானிய அரச குடும்பத்தில் அதிகம் வெறுக்கப்படும் நபர் யார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்ப உறுப்பினர்களில் அதிகம் வெறுக்கப்படும் நபராக இளவரசர் சார்லஸ் என கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

YouGov என்ற அமைப்பு காலத்தால் அழியாத இளவரசி டயானாவின் 20வது நினைவுதினம் அக்டோபார் மாதம் அணுசரிக்கப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஆகும்.

இந்த கருத்துக்கணிப்பின் மூலம் அரச குடும்பத்தில் அதிகம் வெறுக்கப்படும் நபர் இளவரசர் சார்லஸ் என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், காலம் கடந்தும் பிரித்தானிய மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் டயானவின் மீது மக்கள் கொண்டிருக்கும் அன்பும், டயானா விவகாரத்தில் சார்லஸ் மீது ஏற்பட்ட எதிர்மறையான கருத்துக்களும் காரணம் ஆகும்.

2013 ஆம் ஆண்டு 60 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த சார்லஸ் இந்த ஆண்டு 36 சதவீதம் பெற்றுள்ளார். சார்லஸின் மூத்த மகன் 78 சதவீதம், இவரது சகோதரர் ஹரி 77 சதவீதம் பெற்றுள்ளார்.

இளவரசியும், வில்லியமின் மனைவியுமான கேட் மிடில்டன் 2013 ஆம் ஆண்டு 81 சதவீதமும் இந்த ஆண்டு 73 சதவீதமும் பெற்றுள்ளார்.

இளவரசர் சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா 18 சதவீதம் பெற்றுள்ளார். இளவரசர் சார்லஸ் டயானவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு இருந்தே 1979 ஆம் காலகட்டத்தில் கமீலாவுடன் உறவில் இருந்துள்ளார்.

இது திருமணத்திற்கு பின்னர் டயானாவிற்கு தெரியவந்தையடுத்து, இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட இதுவே காரணம் என கூறப்பட்டது, இதனால் 1992 ஆம் ஆண்டு சார்லஸை விட்டு தனியாக விலகி வந்த டயானா, 1993 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்