பிரித்தானியா மகாராணியால் இலங்கையருக்கு கிடைக்கவுள்ள கௌரவம்!

Report Print Murali Murali in பிரித்தானியா
360Shares
360Shares
lankasrimarket.com

சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பிரித்தானிய மகாராணியினால் இலங்கையர் ஒருவர் கௌரவித்து விருது வழங்கி வைக்கப்பட்டவுள்ளார்.

பாக்யா விஜேவர்தன என்னும் இலங்கையரே இவ்வாறு கௌரவிக்கப்பட உள்ளார். 18 முதல் 29 வயது வரையிலான இளம் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.

பால்நிலை சமத்துவம், உளவியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியோர், சிறுவர் உதவிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் மக்களின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட உள்ளது.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் 52 உறுப்பு நாடுகளிலிருந்து இந்த விருதிற்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்