மீண்டும் ஒரு பிரித்தானியரை சிறையில் தள்ளிய துபாய்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஹொட்டல் ஊழியராக சென்ற பிரித்தானியர் ஒருவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறி துபாய் அரசு சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்த இளைஞர் Connor Clements(24). இவர் ஹொட்டல் துறையில் பணி புரியும் பொருட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் துபாய் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவ சோதனையில் அவரது ரத்தத்தில் போதைமருந்து கலந்திருப்பதாக தெரிய வந்ததை அடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பிரித்தானியாவில் இருந்து புறப்படும் முன்னர் தாம் ஒருமுறை போதை மருந்து பயன்படுத்தியிருந்ததாகவும் ஆனால் அது தமது வாழ்க்கையுடன் விளையாடும் என அறியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர், 24 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள அறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய வாழ்க்கை தம்மை மிகவும் இக்கட்டான நிலையில் கொண்டு சென்று விடுமோ என பயந்ததால் தான் துபாயில் வேலை தேடி வந்ததாக கூறும் Connor Clements,

ஆனால் சிறையில் நரக வேதனை அனுபவிக்கும் பொருட்டு தமது முந்தைய வாழ்க்கை கொண்டு சேர்க்கும் என ஒருபோதும் கருதியதில்லை எனவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பல வாரங்கள் சிறையில் இருந்துள்ள கிளமெண்ட்ஸ் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் இரண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறையில் தான் எனவும் கிளமெண்ட்ஸ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் போதை மருந்து வழக்கில் துபாயில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்