திருமணமான 10 மாதத்திற்குள் இளம்பெண் தற்கொலை! விஷ மாத்திரை உட்கொண்ட பரிதாபம்

Report Print Santhan in பிரித்தானியா

தமிழகத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் திருமணம் ஆன 10 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விக்னேஷ் மணி, இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த அங்காள அபிராமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது 50 சவரன் நகை, இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் சென்ற பின்னர், அபிராமியின் மாமியார் கூடுதல் வரதட்சனை கேட்டு அவரை கொடுமைபடுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மாமியார் மற்றும் கணவன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் தனது அம்மாவின் வீட்டில் தங்கியுள்ளார்.

அம்மாவின் தங்கியிருந்த போது அபிராமிக்கும், விக்னேஷ் மணிக்கும் தொலை பேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த தொலைப் பேசி உரையாடலுக்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அபிராமி, தன் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அபிராமியின் தற்கொலைக்கு காரணமானவர்களாக கூறப்படும் விக்னேஷ் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளதால் பொலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers