முதன் முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு பெண் நியமனம்

Report Print Kabilan in பிரித்தானியா
43Shares

மிகப்பழமையான கிறித்துவ பிரிவான 'Church of England' முதன் முறையாக சாரா முல்லாலி என்னும் பெண்ணை லண்டன் பிஷப் பொறுப்புக்கு நியமித்துள்ளது.

கத்தோலிக்க கிறித்துவதிலிருந்து பிரிந்து 1934ஆம் ஆண்டு ‘Church of England’ என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு பெண் மத போதகர்களை நியமித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பிஷப் பொறுப்புக்கு ஒரு பெண்ணை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த முடிவுக்கு பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது சாரா முல்லாலி என்னும் பெண் பிஷப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பொறுப்பினை ஏற்கும் 133வது நபர் சாரா ஆவார், மேலும் இவர் மிகக் குறைந்த வயதில், கடந்த 2001ஆம் ஆண்டு தலைமை செவிலியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்