அம்மா திரும்பி வா! இறந்து போன தாயை நினைத்து சிறுவனின் நெஞ்சை உருக்கும் கடிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

தாய் உயிரிழந்த நிலையில் அவர் தன்னிடம் திரும்ப வர வேண்டும் என கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அவரின் 8 வயது மகன் கடிதம் எழுதியது நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் சைமன் தாமஸ் (44), இவர் மனைவி ஜெம்மா (40), இவர்களுக்கு ஏதன் (8) என்ற மகன் உள்ளான்.

புற்றுநோய் காரணமாக ஜெம்மா கடந்த மாதம் 24-ம் திகதி உயிரிழந்தார்.

ஜெம்மா இல்லாமல் வரும் முதல் கிறிஸ்துமஸ் இது என்பதால் சைமனும், ஏதனுன் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் ஏதன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

அதில், இந்த கிறிஸ்துமஸில் எனக்கு 8 வயதாகிறது. கிறிஸ்துமஸில் எனக்கு பிடித்த விடயங்கள் மூன்று, Playmobil பொம்மை lego பொம்மை மற்றும் என் அம்மா திரும்ப வரவேண்டும் என எழுதியுள்ளான்.

இந்த கடிதத்தை சைமன் இணையத்தில் வெளியிட அது வைராகியுள்ளது.

சைமன் கூறுகையில், என் மனைவியின் மோதிரம் என்னிடம் உள்ளது, ஏதன் பெரியவனாகி திருமணம் செய்யும் பெண்ணுக்கு அந்த மோதிரத்தை அணிவிப்பேன் என என்னிடம் கூறியது என்னை கண் கலங்க வைத்துவிட்டது.

ஜெம்மா இல்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் இணையத்தில் வெளியான ஏதனின் கடிதத்தையடுத்து அவனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்