அருணோதயம் சனசமூக மேம்பாட்டு நிலையத்தின் நத்தார் தின கொண்டாட்டம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

அருணோதயம் சனசமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கடந்த 21ம் திகதி முதியோர் இல்லத்தவர்களும் அருணோதயம் தமிழ்ப் பாடசாலையும் இணைந்து நத்தார் விழாவை வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அருணோதயம் மன்ற கீதத்தைப் பாடி இந்நிகழ்வினை திருமதி ரூபசௌந்தரி கணேசபாக்கியம், திருமதி சிவபாக்கியவதி ராஜதுரை, திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம், திருமதி அன்னபூரணம் சிவராசன், திருமதி சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இப்பாடல் முதியோரால் பாடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அருணோதயம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முதியோர்கள், யுவதிகள் என எல்லோரும் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து ஒற்றுமையுடன் ஒரே மேடையில் 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற கூற்றுக்கிணங்க எமது பாரம்பரியமான கலை கலாச்சார விழுமியங்களை கற்றுணர்ந்து நத்தார் விழாவை மிகச்சிறப்பாகவும் கோலாகலமகாகவும் கொண்டாடினர்.

சிறியோர் முதல் முதியோர் வரை நூற்றுக்கும் மேலதிகமான மக்கள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்