நேற்று வரை கஷ்டப்பட்ட திருநங்கை: இன்று 4 மில்லியன் பவுண்டுக்கு சொந்தக்காரர்

Report Print Santhan in பிரித்தானியா
390Shares
390Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் திருநங்கை ஒருவருக்கு லாட்டரியில் 4 மில்லியன் பவுண்ட் விழுந்துள்ளதால், அவரின் வாழ்க்கையே தற்போது முற்றிலும் மாறியுள்ளது.

பிரித்தானியாவின் Hull பகுதியைச் சேர்ந்த திருநங்கை Melissa Ede, 56 வயதான இவர் அங்கு டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் பிரித்தானியாவில் ஒளிப்பரப்பாகும் The Jeremy Kyle நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

சமீபத்தில் இவர் தனக்கு புது பல் வைக்க வேண்டும் அதனால் £15,000 தேவைப்படுகிறது என்று கூறி, அதை புரட்டுவதற்கே திண்டாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முடியாது என்று நினைத்ததை முடிக்க முடியும் என்பதை நான் நிரூபிக்கப் போகிறேன், அதற்கு நாளை வரை காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த டுவிட்டரை தொடர்ந்து அன்றே இரவு 8 மணிக்கு மேல் 4 என்ற நம்பரை குறிப்பிட்டு அதன் பக்கத்தில் 6 சிரித்த எமோஜிக்களை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அங்கிருக்கும் ஊடகங்கள் Melissa Ede-வுக்கு 4 மில்லியன் பவுண்ட் விழுந்துள்ளதாகவும், அது National Lottery GameStore-ன் Blue Scratchcard மூலம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளன.

ஆனால் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், ஆனால் கிட்டத்தட்ட அவர் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

மேலும் Melissa Ede-வை யூ டியூப் பிரபலம் என்று கூறலாம், அவருக்கு என்று ஒரு கூட்டம் உள்ளது, ஆனால் அவரின் பல்லை பலர் கிண்டல் செய்துள்ளனர். அதன் காரணமாகவே அவர் பல்லை மாற்றுவதற்கு முடிவு செய்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்