இளவரசர் திருமணத்தால் பிரித்தானியாவுக்கு 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம்!

Report Print Fathima Fathima in பிரித்தானியா
454Shares
454Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கலின் திருமணத்தால் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானமாக கிடைக்கப்பெறும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கலின் திருமணம் வருகிற மே மாதம் 19ம் திகதி Windsor Castle-ல் நடைபெறவுள்ளது.

இவர்களது திருமணத்தால் சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானமாக கிடைக்கப்பெறும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை, ஹொட்டல் மூலமாக 200 மில்லியன் பவுண்ட்சும், மக்கள் கொண்டாட்டங்களின் மூலம் 150 மில்லியன் பவுண்ட்சும், திருமணத்திற்கான நினைவுச் சின்னங்களின் மூலம் 50 மில்லியன் பவுண்ட்சும், விளம்பரங்களின் மூலம் 100 மில்லியன் பவுண்ட்சும் கிடைக்கப்பெறும்.

இதன்மூலம் பிரித்தானியா பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருப்பதுடன் சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும்.

கடந்த 2012ம் ஆண்டு இளவரசர் வில்லியமின் திருமணத்தின் போது 350,000 பேர் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்