பெண்களை குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த நபர்: ஆபாச படங்களால் ஏற்பட்ட விபரீதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்கள் உடை மாற்றுவது மற்றும் குளிப்பதை ரகசிய கமெரா மூலம் வீடியோ எடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர் எட்வட் பார்க்கர் (29). ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் ரகசிய கமெராக்களை பொருத்தி 27 பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றும் போது நிர்வாணமாக இருப்பதை வீடியோவாக எடுத்துள்ளார்.

இது குறித்து கண்டுப்பிடித்த பொலிசார் எட்வட்டை கைது செய்தார்கள். அவர் வீட்டில் இருந்த கணினியை சோதனை செய்த போது இந்த வீடியோக்களோடு சேர்ந்து நூற்றுக்கணக்கில் சிறார்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட எட்வட் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

எட்வட் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனிப்பட்ட பாலியல் திருப்திக்காக பெண்களை விடயத்தில் எட்வட் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது கண்டணத்துக்குரியது என நீதிபதி கூறியுள்ளார்.

இதோடு எட்வட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் £170 பணம் கொடுக்கவும், பாலியல் குற்றவாளி பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers