லண்டனில் பற்றி எரியும் தீ: அணைக்க போராடும் 90 தீயணைப்பு படை வீரர்கள்

Report Print Santhan in பிரித்தானியா
178Shares
178Shares
ibctamil.com

லண்டனில் பெயிண்ட் தொழிற்சாலையில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Waterloo சாலையில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் உள்ள கிடங்கில் இரவு உள்ளூர் நேரப்படி 09.20 மணி அளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து தீ எரிந்து வருவதால், தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள், 90 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

மளமளவென தீ பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது, இதனால் அப்பகுதி வழியே மக்கள் யாரும் போகவும் வேண்டாம், வரவும் வேண்டாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை அருகில் இருப்பவர்கள் வீடியோவாக எடுத்து தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதில் ஒருவர் ஆரம்பத்தில் ஒரு புள்ளி போல் எரிந்த அந்த தொழிற்சாலை தற்போது முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்