மணிக்கு £9 வேலையை உதறித் தள்ளிவிட்டு ஆண்டுக்கு £70,000 சம்பாதிக்கும் இளைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
594Shares
594Shares
ibctamil.com

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் செய்து வந்த வேலையை உதறிவிட்டு துவங்கிய தொழிலால் ஆண்டுக்கு 70,000 பவுண்ட்ஸ் ஈட்டி வருகின்றனர்.

பிரிஸ்டல் பகுதியில் குடியிருக்கும் 18-வயதேயான James Grear மற்றும் Henry Bishop ஆகிய இருவரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மணிக்கு £9 வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த வேலை இருவருக்கும் திருப்தியளிக்கவில்லை என தெரிய வந்ததும் இருவரும் இனைந்து நாணய வர்த்தக நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளனர்.

இதில் வித்தியாசமான நாணயங்களை சேகரித்து அவைகளை இணைய தளம் வாயிலாக தேவையானோருக்கு விற்பனை செய்ய இருவரும் முடிவுக்கு வந்தனர்.

தற்போது குறித்த இளைஞர்களின் ஆண்டு வர்த்தகமானது £50,000 முதல் £70,000 வரை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் இருவரும் தங்கள் படுக்கை அறையில் இருந்தே குறித்த வர்த்தகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தகம் தொடங்கிய சில நாட்களிலேயே எந்த நாணயம் அதிகம் விற்பனை ஆகின்றது, எந்த நாணயம் அதிக லாபம் ஈட்டும் என்பதை புரிந்து கொண்டதாகவும், தற்போது தங்களது வர்த்தகத்திற்கு அது மிகவும் உதவிகரமாக உள்ளது எனவும் இளைஞர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்