சுறாவிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய திமிங்கலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
603Shares
603Shares
lankasrimarket.com

பிரித்தானியாவை சேர்ந்த கடல் உயிரியலாளர் Nan Hauserk சுறாவிடம் சிக்கிகொண்டபோது, அவரை திமிங்கலம் காப்பாற்றியதை விவரித்துள்ளார்.

28 ஆண்டுகள் தண்ணீருக்கடியில் திமிங்கலங்களுடன் வாழ்க்கையை Nan Hauserk செலவழித்துள்ளார்.

Cook Island பகுதியில் நீந்திக்கொண்டிருந்தபோது சுமார் 22,700 கிலோ எடையுள்ள பெரிய திமிங்கலம் ஒன்று நீந்தி வந்து Nan Hauserkஐ தனது தலையால் தூக்க முயற்சித்திருக்கிறது.

சுமார் 10 நிமிடங்களாக தனது தலையாலும் வயிற்றாலும். துடுப்புக்களாலும் அவரைத் தள்ள முயல மிகவும் பயந்துபோன Nan Hauserk, கடைசியாக கரைக்கு வந்தபோதுதான் அவருக்கு ஒரு உண்மை புரிந்தது.

திமிங்கலத்துக்கு மறு பக்கத்தில் சுமார் 15 அடி தூரத்தில் அதி பயங்கர Tiger Shark வகை சுறா ஒன்று நீந்திக்கொண்டிருந்தது.அப்போதுதான் திமிங்கலம் தன்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவ்வாறு செய்துள்ளது என்பதை உணர்ந்த Nan Hauserk, திமிங்கலத்தை நோக்கி “I love you, I love you" என்று சத்தமிட்டார்.

ஆச்சரியப்படும் விதமாக அவரது கூட்டாளிகள் இச்சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்