பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் மணமுறிவு கட்டணம்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
266Shares
266Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் மணமுறிவு கட்டணமானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில், அதன் பின்னணி காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கட்டணமும் ராக்கெட் வேகத்தில் அதிகருத்து வருகிறது.

இதுதொடர்பில் வெளியான ஆய்வறிக்கையில், தற்போதைய நிலவரப்படி பிரித்தானியாவில் விவாகரத்து கட்டணமாக 14,500 பவுண்ட்ஸ் வசூலிக்கின்றனர்.

மட்டுமின்றி குறித்த நபர் மணமுறிவுக்கு பின்னர் புதிதாக குடியிருப்பு ஒன்றை வாங்க எண்ணினால் மேலும் ஒரு £144,600 தொகை தேவைப்படும்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மணமுறிவு கட்டணம் அதிகரித்து வந்துள்ள நிலையில் தற்போதைய நிலையில் தம்பதிகள் இருவரிடம் இருந்தும் தலா £7,280 கட்டணம் வசூலிக்கின்றனர்.

மேலும் சட்ட நிபுணர்களுக்கான கட்டணமும் 109% அதிகரித்து £1,280 முதல் £2,679 என எட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் துரித முறையில் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருவதாக கூறும் சட்ட நிபுணர்கள், 14 நொடிகளில் ஒரு வழக்கு முடிவுக்கு வந்ததே பிரித்தானிய வரலாற்றில் முதன் முறை என்கின்றனர்.

மணமுறிவு கட்டணம் விண்ணை தொடும் அளவுக்கு அதிகரித்தாலும் பெரும்பாலான தம்பதிகள், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்தே கடனாக பெற்று சமாளிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக பிரித்தானியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே மணமுறிவு கட்டணம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்