நான் சாகவில்லை..உயிரோடு தான் இருக்கிறேன்: வீடியோவை வெளியிட்ட தொலைக்காட்சி நட்சத்திரம்

Report Print Santhan in பிரித்தானியா
220Shares
220Shares
lankasrimarket.com

தொலைக்காட்சி நட்சத்திரமான ரெபெக்கா ஷெல்டன் இறந்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த Big Brother நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் Rebekah Shelton. பிரித்தானியாவில் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த இவர் குறித்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் இடத்தையும் பிடித்தார்.

அதன் பின் நான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, 2014-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில் இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று, அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி, அன்புக்குரிய Rebekah Shelton கடந்த புதன் கிழமை இறவு இறந்துவிட்டார், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் இதைக் கண்ட சிலர் உண்மையிலே அவர் இறந்துவிட்டதாக கூறி, அஞ்சலி எல்லாம் செலுத்தினர். அதுமட்டுமின்றி இவருடைய இறப்பு தகவல் ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் திடீரென்று மீண்டும் தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தோன்றிய Rebekah Shelton, என்னுடைய டுவிட்டர் அக்கவுண்ட ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், நான் சாகவில்லை, என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்துவிட்டு நலமாக, சந்தோஷமாக இருக்கிறேன்.

தற்போது விடுமுறைக்காக அரேபியாவில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்