தமிழ் மக்களால் எங்களுக்கு பெருமை: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
675Shares
675Shares
lankasrimarket.com

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதிலிருந்து அனைத்து மக்களும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கையில், பிரித்தானிய பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

வீடியோ வடிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரித்தானியாவின் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்