ஐ.எஸ் பயங்கரவாதியை திருமணம் செய்த பிரித்தானிய பெண் கைது

Report Print Arbin Arbin in பிரித்தானியா
365Shares

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரித்தானிய பெண்மணி நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான குறித்த பெண்மணி எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரித்தானியா திரும்பியதாக கூறப்படுகிறது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவரை திருமணம் செய்துள்ள குறித்த பெண்மணிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சுமார் 850 பிரித்தானியர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போரிட்டு வந்ததாக பிரித்தானிய உளவு அமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

தற்போது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் இயக்கத்தினர் அடியோடு ஒழிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியா கடவுச்சீட்டு வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

அதில் கைதான பெண்மணியும் ஒருவர் என தெரியவந்துள்ளது. ஐ.எஸ் அமைப்புடன் தமக்கிருக்கும் தொடர்பை மறைக்கும் பொருட்டு அவர் சிரியாவில் இருந்து எத்தியோப்பியா சென்றுள்ளதும், அங்கிருந்து விமானம் மூலம் பிரித்தானியா திரும்பியுள்ளார்.

ஆனால் பிரித்தானிய உளவு அமைப்புக்கு இத்தகவல் தெரிய வந்ததும், அவர் விமான நிலையம் வந்து சேரும்வரை காத்திருந்து கைது செய்துள்ளனர்.

அவரது 2 வயது குழந்தையை பொலிசார் மீட்டு காப்பகத்தில் சேர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பயங்கரவாத தொடர்புடைய பிரித்தானியர்கள் 150 பேரின் குடியுரிமையை பறித்த அமைச்சரவை, அவர்கள் நாடு திரும்புவதற்கும் தடை விதித்திருந்தது.

பெரும்பாலானவர்கள் ஆயுதங்களை இயக்கவும், வெடிப்பொருட்களை கைய்யாளவும் தேர்ச்சி பெற்றவர்களானதால் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் எழலாம் என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் உள்ளது.

மட்டுமின்றி அதிகாரிகளின் கூற்றுப்படி இதுவரை 350 பிரித்தானிய ஜிகாதிகள் நாடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 300 பிரித்தானியர்கள் சிரியாவில் இருந்து நாடு திரும்பலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்