பிரித்தானியாவில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை கடத்த முயற்சி செய்த நபர் குறித்து அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு மான்சஸ்டர் பகுதியில் கடந்த ஜனவரி 10-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வரும் மர்ம நபர் ஒருவர் திடீரென சிறுமியை கடத்த முயற்சி செய்தபோது சுதாகரித்துக் கொண்ட சிறுமி சாலை அலாரத்தை எழுப்ப முயற்சி செய்ததால், அந்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதே போல் ஒரு சம்பவம் அதே பகுதியில் நடைபெற்றுள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அப்பகுதி சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய பொலிசார், அந்த பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை கூடுதல் கவனுத்துடன் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியை கடந்த முயற்சி செய்த இடத்தில் இருந்த சிசிடிவி கொமராக்களில் பதிவாகியிருந்த மர்ம நபர் செய்த நெஞ்சை பதறவைக்கும் செயல் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் நீல நிற கோட் அணிந்த மெல்லிய நபர் ஒருவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று, கடத்த முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் பொலிசார் குறித்த நபரை இன்னும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.