லண்டனில் சர்ச்சைக்குரிய பிரிகேடியரின் வைரலாகும் மற்றொரு வீடியோ

Report Print Dias Dias in பிரித்தானியா
1271Shares
1271Shares
ibctamil.com

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியின் மீது சகலரினதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்.

அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும், காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயம் அல்ல எனவும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சலுகைகள் அனைத்தையும் மீளப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை குறித்த அதிகாரியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரி செயல் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் வினவிய பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்