பிரித்தானியாவில் சிறுமியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திய நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்

Report Print Santhan in பிரித்தானியா
675Shares
675Shares
ibctamil.com

பிரித்தானியாவில் 11 வயது சிறுமி மர்ம நபர் சரமாரியாக குத்தியதால், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Wolverhampton பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவரை மர்மநபர் குத்தியதால், அவர் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிசார் உயிருக்கு போராடிய அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர் மீதும் வெட்டுக்காயங்கள் உள்ளதால் அவரும் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக 51 வயது மதிக்கத்தக்க நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு தலையில் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து குத்தியுள்ளதால் உயிருக்கு போராடி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்