லண்டன் விமான நிலையம் அருகே சிக்கிய சக்தி வாய்ந்த வெடிகுண்டு: பெரும் சேதம் தவிர்ப்பு

Report Print Harishan in பிரித்தானியா
420Shares
420Shares
ibctamil.com

லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

லண்டன் விமான நிலயத்தின் ஓடுபாதை அருகே உள்ள தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அங்கு குவிந்த பொலிசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தை மூடும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் அளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து ஆட்கள் செல்ல தடை விதித்த பொலிசார், கடற்படை அதிகாரிகள் துணையுடன் வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளனர்.

இதற்கிடையே லண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம், முன்பதிவு செய்துள்ள பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்படி பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலால் லண்டன் முழுவதும் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவிய நிலையில் விமான சேவை பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்