இதுபோன்ற கொடூரத்தை பார்த்ததில்லை: பிரிட்டன் வெளிவிவகாரத்துறை செயலர் வருத்தம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

மியான்மரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்கைகளால் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரோஹிங்கியா மக்கள் பலரையும் ராணுவத்தினர் கொன்று குவித்ததற்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் மியான்மர் சென்றுள்ள வெளிவிவகாரத்துறை செயலர் போரிஸ் ஜான்சன் அரசுமுறைப் பயணமாக மியான்மர் சென்றுள்ளார்.

அங்கு ஆங் சாங் சூகியை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான்சன், ரோஹிங்கியா மக்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உண்மையில் சூகி ரோஹிங்கியா பிரச்சனை குறித்து முழுவதும் புரிந்து கொண்டாரா என தெரியவில்லை.

அவர் ஹெலிகொப்டரில் சென்று நாங்கள் பார்த்ததை பார்க்க வேண்டும், அவருடைய தலைமையில் நம்பிக்கை உள்ளது, ஆனால் இங்கு நடக்கும் பிரச்சனையை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது.

மேலும் இது போன்ற கொடூரத்தை நான் என் வாழ்நாளில் பார்த்தது இல்லை, நூற்றுக்கணக்கான கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் இணைந்து மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மியான்மருக்கு முன்பாக வங்கதேசத்துக்கு சென்ற போரிஸ் ஜான்சன், பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசியதுடன் அகதிகள் முகாமை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...