பிரித்தானியாவில் பாரிய நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
3200Shares
3200Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு பிரித்தானியாவின் முக்கிய பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4.4 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்தப்படி வெலியேறியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவை தாக்கும் பாரிய நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.

பொதுமக்கள் பலரிடம் இருந்தும் பொலிசாருக்கு உதவி கேட்டு அழைப்புகள் குவிந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியகியுள்ளது.

Newport, Cardiff மற்றும் Swansea பகுதி மக்கள் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கமானது தெற்கு வேல்ஸ் பகுதியில் மையம்கொண்டதாகவும், சக்வாய்ந்தது எனவும் ஐரோப்பிய புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு Lincolnshire பகுதியில் ரிக்டர் அளவில் 5.2 என பதிவானதே பாரிய நிலநடுக்கமாக பதிவாகியிருந்தது.

அதன் பின்னர் இன்று தான் பிரித்தானியாவை நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்