பிரித்தானியாவில் பெரும்பாலான KFC உணவகங்கள் மூடல்: இறைச்சி திருடும் வீடியோ வெளியானது

Report Print Athavan in பிரித்தானியா

இறைச்சி பற்றாக்குறை காரணமாக பிரிட்டனில் உள்ள பெரும்பாலான KFC உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த KFC நிறுவனம் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கடைகளை வைத்துள்ளது, இங்கு விற்பனை செய்யப்படும் சிக்கனின் சுவை மக்களை கவர்ந்திழுக்கும்.

இந்நிலையில் KFC நிறுவனத்துக்கும், கோழிக்கறியை டெலிவரி செய்யும் DHL நிறுவனத்துடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையால், இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக KFC நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே மொத்தம் உள்ள 900 KFC உணவகங்களில் 600 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக KFC நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் KFC-யின் ஒரு கிளையில் வேலை செய்யும் தொழிலாளர்களே கோழி இறைச்சியை திருடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனின் Erith-ல் உள்ள KFC உணவகத்தின் அருகில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

சுமார் 6 கருப்பு பைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை, KFC நிறுவனத்தின் சீருடை அணிந்துள்ள தொழிலாளர்கள் உணவகத்தின் பின்வாயிலில் இருந்து வோல்வோ காருக்கு கடத்துவது போன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இறைச்சி தட்டுப்பாடு காரணமாக சேமிப்பை அதிகப்படுத்த KFC நிர்வாகம் இறைச்சியை எடுத்து செல்கிறார்கள் என தான் நினைத்ததாக வீடியோவை எடுத்தவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

”எங்கள் உணவுகளின் தரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்பதால், எங்களின் பல உணவகங்களை மூடிவிட்டோம். இறைச்சி போக்குவரத்தை கையாளும் போது அதன் பாதுகாப்பை உறுதி செய்ய​நாங்கள் கடுமையான கொள்கைகள் வைத்திருக்கிறோம், எனவே இந்த திருட்டு குறித்து அவசரமாக விசாரித்து வருகிறோம், தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்” என KFC உணவகம் சார்பாக அதன் மேலாளர் Mercer என்பவர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers