பிரித்தானியாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்: குழந்தை வெளியே வந்துவிட்டதால் கணவர் எடுத்த முடிவு

Report Print Santhan in பிரித்தானியா
578Shares

பிரித்தானியாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து ஆண்ட்ரூவின் மனைவியான டேனியல்லாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் இந்த பனிப்பொழிவிலும் மனைவியை எப்படியாகவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது பனிப் பொழிவு மிகவும் அதிகமாக இருந்ததால், காரை கொஞ்ச தூரம் கூட நகர்த்த முடியவில்லை. அதன் பின் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்குள் டேனியல்லாவின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்துவிட்டது. இதைக் கண்ட அவரது கணவர் ஏற்கனவே மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதை அறிந்திருந்ததால், குழந்தையை பத்திரமாக எடுத்துள்ளார்.

உறைபனியில் பிறந்த அந்தக் குழந்தைக்கு சியன்னா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தக் குழந்தைக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த குழந்தை ஏ66 என்ற சாலையில் கார் இருக்கும் போது பிறந்ததால் #A66snowbaby என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆண்ட்ரு கூறுகையில், கடும் பனியில் சிக்கி திணறிவிட்டேன். மருத்துவமனையை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது.

ஏற்கனவே மருத்துவமனையில் நான் பார்த்ததை அப்படியே செய்து குழந்தையை பிரசவித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்