பக்கிங்காம் அரண்மனை சுவர் வேலியில் பயங்கரமாக மோதிய கார்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா
298Shares

பிரித்தானியாவில் உள்ள பக்கிங்காம் அரண்மனையை சுற்றியுள்ள வேலி மீது நேற்றிரவு ஒரு கார் வேகமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனில் அமைந்துள்ளது ராஜகுடும்பத்துக்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனை. அரண்மையை சுற்றியுள்ள வேலி மீது கார் ஒன்று வேகமாக நேற்றிரவு மோதியது.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டனர். இது சம்மந்தமான வீடியோவும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இது எந்த வித தாக்குதலும் கிடையாது எனவும், சாலை போக்குவரத்து மோதல் தான் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை.

இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Credit:Twitter

Credit:Twitter

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்