முன்னாள் ரஷ்ய உளவாளியை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி? பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
329Shares
329Shares
lankasrimarket.com

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் முன்னாள் ரஷ்ய உளவாளியை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்ததாக கருதப்படும் சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் பிரித்தானியாவின் Wiltshireஇலுள்ள Salisbury நகரில் உள்ள ஷாப்பிங் சென்டரின் முன் உள்ள பெஞ்ச் ஒன்றில் 66 வயதுள்ள ஆண் ஒருவரும் 33 வயதுள்ள பெண் ஒருவரும் மயங்கிக் கிடந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு போராடும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் சாதாரண ஒரு சம்பவம் போல் தோன்றினாலும், இதன் பின்னணியில் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு நீண்ட கால பகை மறைந்திருக்கிறது.

இப்போது பொலிசாரால் மீட்கப்பட்டவர் பெயர் Sergei Skripal. அவர் ஒரு முன்னாள் ரஷ்ய உளவாளி.

MI6 என்னும் பிரித்தானிய உளவு நிறுவனத்துக்காக ரஷ்யாவை உளவு பார்த்த உளவாளி, ரஷ்ய ராணுவ உளவுத்துறையில் colonel ஆக பதவி வகித்துக் கொண்டே பிரித்தானியாவுக்காக உளவு வேலை பார்த்தவர்.

அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதும் பிரித்தானியாவில் ஏன் இவ்வளவு பரபரப்பு என்று பார்த்தால் அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் இதே பிரித்தானியாவில் நடந்தேறியது. Litvinenko என்னும் ஒரு நபர் டீ அருந்திக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.

பின்னர் அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்பதும் அவரது டீயில் கதிரியக்கத் தன்மை கொண்ட விஷப்பொருள் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால்தான் தற்போது மீண்டும் ஒரு உளவாளி பாதிக்கப்பட்டதும் பிரித்தானியர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.

Sergei Skripalக்கும் கதிரியக்கத்தன்மை கொண்ட விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின்பேரில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை, அவர் மயங்கிச் சரிந்த ஷாப்பிங் மால் முதலான இடங்களுக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

2006இல் இறந்த உளவாளியான Litvinenkoவின் மனைவியான Marina Litvinenko, தனது கணவருக்கு நிகழ்ந்தது போலவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இது ரஷ்யாவில் சகஜம் என்றும் மேலிட உத்தரவின் பேரில் உளவாளிகள் கொல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அந்த மேலிடம் என்பது ரஷ்ய அதிபர் புடின்தான் என்றும் இது போன்ற சம்பவங்கள் ஒரு முறை அல்ல பல முறை நிகழ்ந்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்