ரஷ்ய முன்னாள் உளவாளியின்மீது விஷப்பொருள் ஸ்பிரே செய்யப்பட்டிருக்கலாம்: பொலிஸ் தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
220Shares
220Shares
lankasrimarket.com

கொலை முயற்சித் தாக்குதலில் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளியான Sergei Skripalஇன் மீது விஷப் பொருள் ஸ்பிரே செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொலிசாருக்கும், மருத்துவ உதவிக் குழு ஊழியர்களுக்கும், அவர்களும் அந்த விஷ வாயுவை சுவாசித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் தங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Gas Maskகுகளை அணிந்து பணிபுரிகின்றனர்.

இதற்கிடையில் இந்த வழக்குக்கு உதவும் வகையில் வேறு பல புதிய தகவல்களும் கிடைத்துள்ளன.

Sergei Skripalஉடன் மயங்கிக் கிடந்த பெண் அவரது மகளான Yulia என்பதும் தனது தந்தைக்கு உதவ முயன்றதில் அவரும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இன்னொரு எதிர்பாராத திருப்பமாக வீடியோவில் அவருடன் நடந்து செல்லும் பெண் அவரது மகள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரணம் அவரது மகள் செம்பழுப்பு நிற தலை முடியை உடையவர், வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணோ வெண்ணிற தலை முடியை உடையவர், எனவே பொலிசார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மயங்கி விழுவதற்குமுன் அவர்கள் சென்ற மதுபான விடுதியில் அவர்களுக்கு ஏதேனும் விஷம் கலந்த பானம் கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட Sergei Skripalம் அவரது மகளும் இன்னும் அபாய நிலையில்தான் உள்ளனர் என்பதும் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் நிச்சயம் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்கும் என்பதனால் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு இது வழிநடத்தியுள்ளது என்பதும் சமீபத்திய தகவல்களாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்