பிரித்தானியாவில் அதிரடியாக உயரும் கடவுச்சீட்டு கட்டணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்படும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டண உயர்வு சிறார்களுக்கு 27 விழுக்காடு வரை உயரும் எனவும், இந்த கட்டண உயர்வானது எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் அமுலுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் வயது நிரம்பியவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணமானது 72.50 பவுண்ட்ஸ் என இருந்த நிலையில் தற்போது அது 85 பவுண்ட்ஸ் என அதிகரிக்க உள்ளது.

மேலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கடவுச்சீட்டு கட்டணமானது 46 பவுண்ட்சில் இருந்து 58.50 பவுண்ட்ஸ் என அதிகரிக்க உள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் அனைத்தும் மார்ச் 27 ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.

மார்ச் 27-கு முன்னர் பதிவு செய்பவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணமே வசூலிக்கப்படும்.

மட்டுமின்றி இணையம் வாயிலாக பதிவு செய்யும் கடவுச்சீட்டு கட்டணங்களும் அதிகரிக்க உள்ளது.

இது சிறார்களுக்கு 49 பவுண்ட்ஸ் எனவும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 75.50 பவுண்ட்ஸ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால் அரசுக்கு சுமார் 50 மில்லியன் பவுண்ட்ஸ் அதிக வருவாய் சேரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers