நீ சிறந்த சகோதரி: உயிரிழந்த தங்கைக்கு 5 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்த சில நாட்களில் உயிரிழந்த தங்கையை நினைத்து அவளின் ஐந்து வயது சகோதரி எழுதிய கடிதம் வைரலாகியுள்ளது.

Gateshead நகரை சேர்ந்தவர் பவுல் டவ்கிளாஸ் (36), இவர் மனைவி ஆஸ்லீ கிரைக் (31). இவர்களுக்கு நீவி (10) மற்றும் டெய்சி (5) என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ஃபீபி என பெற்றோர் பெயர் வைத்த நிலையில் பிறந்த 19 நாட்களில் உடலுறுப்புகள் செயலிழப்பால் ஃபீபி பரிதாபமாக இறந்தாள்.

இந்நிலையில் அடுத்தமாதம் ஃபீபி-யின் முதல் பிறந்தநாள் வருகிறது.

இதையடுத்து ஃபீபி-யின் சகோதரி டெய்சி, அவளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் அதை ஆஸ்லி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ஃபீபி-க்கு, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.

தினமும் உன்னை மிஸ் செய்கிறேன், உன் பிறந்தநாளை கொண்டுவதன் மூலம் அழகான நாளை நாங்கள் பெறவுள்ளோம்.

உலகில் மிக சிறந்த சகோதரி நீதான், ஏனென்றால் நீ மிகவும் சிறப்பானவள் என எழுதியுள்ளார்.

இந்த கடிதமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது குறித்து டெய்சியின் தாய் ஆஸ்லீ கூறுகையில், ஃபீபி பிறந்தவுடன் டெய்சி அதிகம் மகிழ்ச்சியடைந்தாள்,

தற்போது அவள் குறித்து டெய்சி எழுதியுள்ள கடிதம் எனக்கு நெகிழ்ச்சியாகவும் பெருமையளிப்பதாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers