பிரித்தானியாவில் வீடற்ற இளைஞருக்கு புகலிடம் கொடுத்த மூன்று பிள்ளைகளின் தாய்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
415Shares
415Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் கடந்த வாரம் முழுவதும் கடும் பனிப்பொழிவு வாட்டி எடுத்த நிலையில் வீடின்றி பழைய ரயில் பெட்டி ஒன்றிற்குள் வாழ்ந்த ஒரு இளைஞருக்கு தனது வீட்டில் வாழ இடமளித்திருக்கிறார் மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண்மணி.

கடந்த வாரம் பனிப்பொழிவு பிரித்தானியாவையே நடுங்கச் செய்த நேரத்தில் Natalie Hawkins(41) தனது மகனிடம் இந்தக் குளிரில் வீடு இல்லாதவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் இல்லையா என்று கூற, அவனும் தனக்குத் தெரிந்த Kilday(24) என்னும் ஒருவரும் வீடின்றி பழைய ரயில் பெட்டி ஒன்றிற்குள் கடந்த ஒரு ஆண்டாக வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளான்.

அதிர்ந்துபோன Ms Hawkins, உடனடியாக போன் செய்து அவரை வீட்டுக்கு அழைக்கச் சொல்லியிருக்கிறார்.

“சற்று நேரத்தில் அந்தப் பிள்ளை வந்தான், அவனுக்கு ஒரு கப் டீயும் கொஞ்சம் spaghetti bologneseயும் கொடுத்தேன். அவன் பயத்துடனும், குளிரில் நடுங்கிக்

கொண்டும் இருந்தான்.” என்று கூறும் Ms Hawkins,தனது தங்கையை அழைத்து, ஒரு தாயாக தன்னால் அவனை வெளியே குளிரில் அனுப்ப முடியாது என்று கூறியிருக்கிறார்.

“அவன் ஒரு நல்ல பையன்” என்று கூறும் Ms Hawkins, Kilday சொந்தக்காலில் நிற்பதற்காக ஒரு Facebook குழுவை அமைத்து அவருக்கு உதவ மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பலரும் தங்களாலான உதவிகளை அந்த இளைஞருக்கு செய்து வருகிறார்கள்.

Kilday கூறும்போது, தனது தாய் வேலை நிமித்தமாக அயர்லாந்து சென்றுவிட்டதால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த பழைய ரயில் பெட்டியைக் கண்டு அதில் வசித்து வருவதாகவும் கூறினார்.

Ms Hawkinsஇன் அன்பால் நெகிழ்ந்து போன Kilday, தனது நிலைமை தெரிந்தால் மக்கள் தன்னை மோசமாக நினைப்பார்கள் என்று எண்ணி யாரிடமும் தன்னைப் பற்றிக் கூறாமலே வாழ்ந்ததாகவும், தற்போது மக்கள் தன் மீது காட்டும் அன்பு தன்னை நெகிழச்செய்து விட்டதாகவும் கூறுகிறார்.

நன்றாகப் பாடும் அவர் தற்போது மது பான விடுதி ஒன்றில் பாடகாரப் பணி புரிகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்